சென்னை அடுத்த தாம்பரம் அருகே செல்போன் எடுக்க முயன்றபோது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலையூரில் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலாஜி என்பவரின் 3 வயது குழந்தை உயிரிழந்தது. நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் அலமாரியில் வைக்கபட்டிருந்த கைபேசி ஒலித்துள்ளது. அப்போது கைபேசியை எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது தொலைக்காட்சி பெட்டி விழுந்துள்ளது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தான் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.