தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற தொகுதி தவிர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியது. மேலும் சூலூர் தொகுதி MLA மாரடைப்பால் உயிரிழந்ததால் அதையும் சேர்த்து 4 சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
மேலும் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டிய நிலையில், சட்டமன்ற தொகுதி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் சரவணன், சூலூர் சட்டமன்ற தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் எம்.சி சண்முகையா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.