ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புகைப்படக் கலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் புகைப்படக் கலையின் வரலாறு ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது. முன்னோர்களில் அரிஸ்டாடில் என்ற அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியை புகைப்படத்திற்கு ஆணிவேர் என்று கூறலாம். 1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் என்பவர். என்பவரால் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்தியாவிற்கு 1850 ஆம் ஆண்டு தான் புகைப்படக்கலை வந்தது 1888ம் ஆண்டு ஜார்ஜ் முதல் முறையாக பேப்பர்களை பயன்படுத்தி பொக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். 1900 ஆம் ஆண்டு பாக்ஸ்புரோ என்ற வகை கேமராக்களை கொடாக் அறிமுகப்படுத்தியது. 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913ல் விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்தார். முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பிறகு தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றி உள்ளது என்றே கூறலாம். உதாரணமாக சீன வீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன் வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1904 ஆம் ஆண்டு ஸ்வீடனில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துக்காட்டியது புகைப்படம், போபாலில் விஷவாயு தாக்கிய சிறுமியின் புகைப்படம், நிரோஷிமா நாகசாகி வெடிகுண்டின் புகைப்படம், மோனாலிசா புகைப்படம், பச்சைநிற கண்ணுடைய ஆப்கான் பெண் புகைப்படம், உகாண்டாவில் பட்டினியால் சாகப்போகும் ஒரு குழந்தையின் புகைப்படம் என மறக்க முடியாத புகைப்படங்கள் பல உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் புகைப்படம் நம் வாழ்க்கையோடு ஒன்றி விட்டது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் எளிதாக உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூகப்பிரச்சனைகள், சுகதுக்கங்கள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியால் புகைப்படம் வளர்ச்சி அடைந்தாலும் புகைப்படத்தால் இன்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கேமராவை நன்மைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் புகைப்படக்கலை அனைத்து விதங்களிலும் முன்னேற்றம் அடைந்து வருவதால் ஆண்டுதோறும் சிறந்த புகைப்படங்களுக்கு பல அமைப்புகளால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.