Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் சரத்பவார்… வீட்டில் பணியாட்கள் 5 பேருக்கு தொற்று…!!

காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பங்களா வீடு தென்மும்பை பகுதியில் அமைந்துள்ளது. அவரது வீட்டில் வேலை பார்க்கும் 3 காவலாளிகள், ஒரு சமையல்காரர் மற்றும் அவரது மகன் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்  சரத்பவார் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என வந்தது. அதன்பின் அவர் வீடு திரும்பினார். இந்த தகவலை வெளியிட்ட மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, சரத்பவார் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் ஆனால் இன்னும் சில நாட்களுக்கு மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சரத்பவாரை கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |