மகாராஷ்டிர மாநிலத்தில் கெமிக்கலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கரில் நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கெமிக்கல் ஆலையில் நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்து இருப்பதாக பால்கர் கலெக்டர் கைலாஷ் ஷிண்டே தெரிவித்து இருக்கிறார். ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.