பிரிட்டனை சேர்ந்த மருத்துவ உற்பத்தி நிறுவனம் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை விரைவில் முடிவடைய போவதாக கூறியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பரவலை கட்டுப்படுத்த மருத்துவத் துறையினர் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். கொரோனா தடுப்பூசியை கண்டறிய பல்வேறு நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதில் ஒரு சில நிறுவனங்களில் மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கின்றன.
இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனம் அஸ்ட்ரா செனேக்கா, மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுடன் கொரோனா தடுப்பு ஊசி தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டறிவதில் மூன்றாவது கட்ட பரிசோதனை டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிவடையும் என்றும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இந்த தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். இந்த தடுப்பூசியின் விலை ஐரோப்பிய நாடுகளை விட மிகக் குறைவாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.