சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனைக் குறைப்பை எதிர்க்கும் விதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது சென்ற 2016 ஆம் ஆண்டு முன்பு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கணவர் சங்கா் உயிரிழந்து விட்டார். மாநிலத்தையே உலுக்கி எடுத்த இந்தக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 6 பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை வழக்கில் இருந்து விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் சென்ற ஜூன் மாதம் உத்தரவிட்டது.
மேலும் மணிகண்டன், செல்வகுமார், தமிழ்வாணன், ஜெகதீசன் மற்றும் மதன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.