Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.  பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு கொடுத்த அறிக்கையின்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 39 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கின் வாதம், பிரதி வாதம் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 815 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு இந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி மறுக்கப்பட்டடு ஸ்டெர்லைட் ஆலை மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனால் தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Categories

Tech |