Categories
உலக செய்திகள்

ரஷ்ய தடுப்பூசியில் சந்தேகம்… கவலை தெரிவித்துள்ள விஞ்ஞானி…!!!

ரஷ்ய தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து சந்தேகம் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியுள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பீட்டர் சார்லஸ் டோஹர்ட்டி, சாதாரண செல்களில் இருந்து வைரஸ் பாதித்த செல்களை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்பது பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றுள்ளார். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கொரோனாவிற்கு எதிராக பிரஷ்யா கண்டறிந்துள்ள ‘ஸ்புட்னிக்-5’ தடுப்பூசி குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ” ரஷ்யா கண்டறிந்துள்ள தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் எப்படி இருக்குமோ என்பது பற்றி பெரும் கவலை உள்ளது. அதுமட்டுமன்றி இந்த சந்தேகம் உண்மையாகி விட்டால், அதன் பின்னர் மற்ற தடுப்பூசிகள் பற்றியும் சந்தேகம் எழுந்துவிடும் என்பது பெரும் கவலையாக உள்ளது. இந்த நேரத்தில் தடுப்பூசிக்கு பதிலாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது நல்லதா என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் தடுப்பூசியின் விலை மிகவும். அது விரைவாக நோயை குணப்படுத்தக் கூடியது.

இருந்தாலும் தடுப்பூசி பலன் அளிக்காவிட்டால் வைரஸ் தடுப்பு மருந்துகள் கட்டாயம் தேவைப்படும். ரஷ்யா தங்களின் தடுப்பூசியை ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் நாடுகளுக்கு கொடுப்பதுடன், ஏழை நாடுகளுக்கும் வழங்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்தியா குறைந்த விலையிலான மருந்துகள் மற்றும் தடுப்பூசியில் சாதனை படைத்துள்ளது. அதனால் இந்த விஷயத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கலாம். சர்வதேச பொருளாதாரம் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இதுவே ஒரே வழி” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |