தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத் தொடர்ந்து இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று காலை பத்து முப்பது மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது சரிதான் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டுமொத்த தமிழக மக்களும் கொண்டாடுகின்றனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாலைகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்று கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பு எதிரொலி ஸ்டெர்லைட் போராட்டக்குழு மகிழ்ச்சி…. #SterliteCase #thoothukudi @Saislakshmanan @PramodMadhav6 @Mugilan__C @mugeshinmedia @rajakumaari @SRajaJourno pic.twitter.com/Cv0iCVSHvw
— Rajesh (@Rajeshjourn) August 18, 2020