Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இளம்பெண்ணை கர்பமாக்கிய வாலிபர்… இளம்பெண் தர்ணா…!!

ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக  ஏமாற்றியதால் கர்ப்பிணி பெண் வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். 

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கர்ப்பிணி பெண் ஒருவர், வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இவர் கோவிந்தாபுரத்தில் உள்ள ரேணுகா என்ற பெண்ணும் அதே ஊரை சேர்ந்த   ஜானகிராமன் என்ற கார் ஓட்டுநர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆசை வார்த்தை கூறி தன்னை அவர் கர்ப்பமாக்கி விட்டதாக ரேணுகா புகார் தெரிவித்துள்ளார்.

Image result for ஆம்பூர் மகளிர் காவல் நிலையம்

திருமணம் செய்து கொள்ள ஜானகிராமன் மறுத்து விட்டதால் ஆம்பூர் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.இதனைத்தொடர்ந்து காதலித்து ஏமாற்றியதால் காதலன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது போலீசாரின் காலில் விழுந்து காதலனை சேர்த்து வைக்கும்படி அப்பெண் கதறி அழுதார். தப்பியோடிய காதலனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |