Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பி-யின் உடல்நிலை… சகோதரி ஷைலஜா மகிழ்ச்சி தகவல்…!!!

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரின் தங்கை எஸ்.பி.சைலஜா விளக்கம் அளித்திருக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. அதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவரின் உடல் நிலை பற்றி அவரின் தங்கை ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஒவ்வொரு நாளும் எனது சகோதரியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது.

மருத்துவர்கள் அவருக்கு வெல்டர் உதவியின்றி சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளனர். அவருக்கு நினைவாற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு சிறந்த அறிகுறியாகும். மருத்துவர்கள் அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் குணமடைய நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். உலகம் முழுவதும் அவரை திரும்ப பார்க்க விரும்புகின்றது. இந்தப் பின்னடைவுக்கு பின்னர் எனது சகோதரர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். ‘அண்ணையா’ இதில் இருந்து மீழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |