இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி எம்01 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.8999 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது விலை குறைப்பின் படி இந்த மாடல் ரூ.8399 நிலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் கிடைக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்11 மாடலுடன் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்களாக கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி ஆகியவை வழங்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி 13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி டெத் சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.