Categories
தேசிய செய்திகள்

13 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை விரிவுபடுத்த… இந்தியாவுடன் பேச்சுவார்த்தை…ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு…!!

விமான போக்குவரத்தை 13 நாடுகளுக்கு தொடங்கி வைக்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விமானத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 23ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து, உள்நாட்டு விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. மே 25ஆம் தேதி திரும்பவும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை ஏர் இந்தியா  வந்தே பாரத் திட்டம் மூலம் இந்தியாவுக்கு கட்டணம் வசூலித்து அழைத்து வந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இந்தியா விமான போக்குவரத்தை தொடங்கியது.

அதே நேரம் வந்தே பாரத் திட்டம் எனக் கூறி வணிக ரீதியில் விமானத்தை இயக்குவதாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அந்த நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களை குறிப்பிட்ட அளவில் இயக்க இந்தியா அனுமதி கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா, இத்தாலி, நியூசிலாந்து, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷியா, சிங்கப்பூர், தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் விமான போக்குவரத்தை தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இந்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |