Categories
சினிமா தமிழ் சினிமா

“ராணா திருமணம்” வாழ்த்த கூட செய்யல…. பதிவுகளை அழித்து தள்ளிய பிரபல நடிகை…!!

 

பிரபல நடிகையான த்ரிஷா தனது சமூக வலைத்தள பதிவுகளில் ஒரு சில பதிவுகளை விட்டுவிட்டு மற்ற பதிவுகளை டெலிட் செய்துள்ளார்.

 

இதுவரையில் சமூக வலைத்தளங்களில் இப்படி யாராவது செய்து இருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் நடிகை த்ரிஷா செய்திருப்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது. அவரின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் உள்ள ஒரு சில முக்கிய பகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்தையும் திடீரென ‘டெலிட்’ செய்துள்ளார். அதோடு சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களாகவே அதிகமாக பதிவிடுவதை அவர் நிறுத்தி கொண்டார்.

 

மீடியாக்களில் த்ரிஷாவின் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட பாகுபலி நடிகரான ராணாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அவரின் திருமணம் நிச்சயமான போது கூட த்ரிஷா வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. திருமணத்திற்கும் வாழ்த்து சொல்லவில்லை. அது பற்றிய செய்திகளும் வெளிவந்தன. இந்த நிலையில் அவர் தன்னுடைய பழைய பதிவுகளை திடீரென டெலிட் செய்ததற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.

Categories

Tech |