நம் நாட்டிற்கு வாய்த்த மோசமான ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என்று முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மைக்கேல் ஓபாமா இது குறித்து கூறுகையில், ” என்னால் முடிந்தவரை நேர்மையாகவும் தெளிவாகவும் இருக்கட்டும். டொனால்ட் ட்ரம்ப் நம் நாட்டிற்கு கிடைத்த மிகவும் மோசமான ஜனாதிபதி. அந்த வெள்ளை மாளிகையில் நாம் ஏதேனும் தலைமை தன்மை அல்லது நிலை தன்மையின் ஒற்றுமையை எப்போதும் காண இயலாது. அதற்கு பதிலாக நமக்கு குழப்பம், பிளவு மற்றும் பச்சாதாபம் ஆகியவை கிடைத்துள்ளன. ஒபாமாவுடன் டெம்பர் டூவாக பணியாற்றி வந்த பிடன் ஒரு சிறந்த துணை ஜனாதிபதியாக விளங்கி வந்தார். எனக்கு ஜோ பிடனை நன்றாக தெரியும்.
அவர் விசுவாசத்தால் வழிநடத்தப்பட்ட ஆழ்ந்த கண்ணியமான மனிதர். மேலும் அவர் உண்மையை மட்டுமே பேசுவார். அதே சமயத்தில் அறிவியலையும் அதிகமாக நம்புவார். பொருளாதாரத்தை மீட்பதற்கும், கொரோனாவை தோற்கடிப்பதற்கும், நமது நாட்டை வழி நடத்துவதற்கும் என்ன தேவை என்பதை அவர் கட்டாயம் அறிவார். ஜனாதிபதி டிரம்ப் உருவாக்கியுள்ள குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர நவம்பர் மாதம் நடக்கவுள்ள தேர்தலில் ஜோ பிடனை அனைவரும் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.