Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி விரைவில்… ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தகவல்…!!!

இங்கிலாந்தை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரா செனேக்காவின் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று கூறியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகில் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வரை உலகம் முழுவதும் 2,20,36,529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனா தாக்குதலால் தற்போது வரை 7,76,862 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 64,84,031 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களின் 62,037 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் கொரோனாவில் இருந்து தற்போது வரை 1,47,75,636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு சில நாடுகளில் உள்ள நிறுவனங்களின் மருந்துகள், இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கின்றன. இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அந்நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா, மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு நாடுகளுடன் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டறிவதில் மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். மேலும் இந்த தடுப்பூசியின் விலை ஐரோப்பிய நாடுகளை விட மிகக் குறைவாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் தயார் செய்வதற்கு மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்தியாவில் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்றும், அதன் விலை ரூ.1000 ஆக இருக்கும் என்றும் சீரம் நிறுவனம் கூறியிருக்கிறது.

Categories

Tech |