ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சுதந்திர தினத்தன்று பயங்கர ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இன்று சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தலைநகர் காபூலின் வஜீர் அக்பர் கான்,ஷெர்போர், 1வது மேக்ரோரியன் மற்றும் ஷாஷ்டாரக் ஆகிய பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடந்தால், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
இன்று காலையில் காபூல் நகரத்தின் பி.டி 8 மற்றும் பி.டி 17 பகுதிகளில் இரண்டு வாகனங்களில் இருந்து பல ராக்கெட்டுகளை ஏவப்பட்டதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தற்போதுவரை தலிபான்கள் உட்பட எந்த ஒரு பயங்கரவாத குழுக்களும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மேலும் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.