பான்கார்டு விதிமுறைகளை சரியாக பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித் துறை எச்சரித்துள்ளது.
சமீபத்தில் பான் கார்டு ஆதார் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பலர் ஆதார் கார்டுடன் தங்களது பான் கார்டை இணைத்தனர். இதன்மூலம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சுலபமாக கண்டுபிடிக்கபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது பான் கார்டு குறித்து மற்றொரு பரபரப்பு உத்தரவை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த விதிமுறைகளை பின்பற்ற தவறினால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.