50 வயதை எட்டிய போதும் சின்னப்பெண் என மது கடைக்காரர்கள் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு இருக்கும் பெண் பற்றிய சுவாரசிய தகவல்
பிரிட்டனை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ராஜன் கில் என்பவர் ஒவ்வொரு முறையும் மதுபானம் வாங்க கடைக்கு செல்லும் போதெல்லாம் அவரிடம் கடையின் உரிமையாளர்கள் அடையாள அட்டை கேட்டுள்ளனர். இதுவே ராஜன் கில்லுக்கு அடிக்கடி நடப்பதாகும். 50 வயதான அவரை சின்னப் பெண் என நினைத்து அவர் மதுபானம் வாங்கும் வயதுடையவர் தானா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவே கடையின் உரிமையாளர்கள் அடையாள அட்டையை கேட்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் அவரின் தோற்றமே.
ராஜன் கில்லின் கணவர் ஹர்ப்ரீட் அவரை விட பத்து வயது இளையவர். ஆனால் ராஜன் கில்லை பார்த்தால் அந்த வித்தியாசம் தெரிவதில்லை. இத்தனைக்கும் அவர் இதுவரை எந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் இல்லை. 25 வயதில் நீலம் என்ற மகளும் 19 வயதில் ஜாஸ்மின் என்ற மகளும் ராஜம் கில்லுக்கு இருக்கும் நிலையில் அவரது புகைப்படத்தை பார்ப்பவர்கள் இரண்டு மகள்களின் சகோதரியா என கேட்கின்றனர். இதனால் அவ்வப்போது இரண்டு பெண்களும் தாயை கிண்டல் செய்வது வழக்கம். ஆனால் ராஜன் கில் இதனையும் பாஸிடிவாக எடுத்துக் கொள்கிறார்.