வறுமையிலும் கீழே கண்டெடுத்த நகையுடன் இருந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சித்தார்த் ஸ்மிதா தம்பதியினர் துப்புரவு பணியாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஏழை தம்பதியின் வீட்டின் அருகே பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனைப் பார்த்த சித்தார்த் தனது மனைவியின் பர்ஸ் போன்று இருந்ததால் அதனை எடுத்து ஸ்மிதாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தான் பர்ஸை தொலைக்கவில்லை என்றும் அது என்னுடையது இல்லை என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கீழே கிடந்த தொடுக்கப்பட்ட பத்தை இருவரும் திறந்து பார்த்தனர். அதில் மூன்று லட்சம் மதிப்புள்ள தாலியும் பணமும் இருந்துள்ளது. இதனை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க தம்பதி முடிவெடுத்து வாட்ஸ் அப் செயலியில் இதுகுறித்த தகவலை வெளியிட்டனர். அவர்களது தகவல் வெகுவிரைவாக பரவிய நிலையில், பர்ஸில் இருக்கும் பொருட்கள் பற்றி ப்ரீத்தி என்ற பெண் மிகவும் சரியாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அதற்கான உரிமையாளர் அவரே என முடிவு செய்து தம்பதிகள் ப்ரீத்தியிடம் பர்ஸை ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து ப்ரீத்தி கூறுகையில் “தாலி இருந்த பர்ஸை தொலைத்ததால் மிகவும் துயரத்தில் இருந்தேன். தற்போது அது என்னிடம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பலர் நகை இருப்பதை கண்டால் அதனை அவர்களுக்கு எடுத்துக்கொள்ள நினைப்பார்கள். ஆனால் இந்த தம்பதி நேர்மையாக நடந்து கொண்டுள்ளனர் என கூறியுள்ளார்.
இதனிடையே நகராட்சி மன்றம் இத்தம்பதியின் செயலைப் பாராட்டி அவர்களை கௌரவப்படுத்தி உள்ளது. நகராட்சி ஊழியர் ஹசாரே இதுகுறித்து கூறிய போது, “கொரோனா தொற்று பரவல் காலத்தில் பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் தங்க நகையுடன் கண்டெடுக்கப்பட்ட பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதியின் செயல் பாராட்டுக்குரியது” என தெரிவித்துள்ளார்