Categories
தேசிய செய்திகள்

2 தலைகளுடைய விஷத்தன்மை கொண்ட அரிய பாம்பு… தீயாக பரவும் வீடியோ..!!

குடியிருப்பின் வெளியே இரண்டு தலைகளுடன் இருக்கும் அரிய பாம்புவகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் வீட்டின் வெளியே விசித்திரமான பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சுமார் 11 செண்டிமீட்டர் நீளம் இருக்கும் இந்த பாம்பு கண்ணாடி விரியன் என்னும் மிக பயங்கர விஷத்தன்மை வகையை சேர்ந்ததாகும். இந்தப் பாம்பை கல்யாண் குடியிருப்பின் டிம்பிள் ஷா என்ற குடியிருப்பு குழந்தைகளே பார்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பத்திரமாக அந்தப் பாம்பை மீட்டனர். மீட்கப்பட்ட பாம்பு இரண்டு தலைகளுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. .இது உலக அளவில் மிகவும் அரிதான ஒன்றாகும் இது பற்றிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |