Categories
தேசிய செய்திகள்

103 வயது முதியவர்… கொரோனாவிலிருந்து மீண்டும் சாதனை… மலர் கொத்து கொடுத்து வழியனுப்பிய மருத்துவ ஊழியர்கள்…!!

103 வயதான முதியவர் கொரோனாவில் இருந்து விடுபட்டதை அடுத்து மருத்துவ ஊழியர்கள் அவருக்கு மலர் கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதுபோல், கேரளாவிலும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு சென்ற மாதம் முதல் வேகமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 48,000ஐ நெருங்குகிறது. மேலும் 175 பேர் உயிரிழந்து விட்டனர். அதிலும் கோரமுக கொரோனா வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரையும் வயது வரம்பு பார்க்காமல் தனது கோரப்பிடியில் சிக்க வைத்து வருகிறது.

வயது முதிர்ச்சி, பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள முதியோர் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் வயதானவர்கள் பொது இடங்களில் சுற்றித்திரிய வேண்டாம் என்றும், வீடுகளில் தங்கியிருக்கவும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் கொரோனாவை வென்ற 103 வயது முதியவர் பூரணமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கேரளாவில் உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்த பரீத் என்ற 103 வயது முதியவர், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு எர்ணாகுளம் கலமசேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் சிகிச்சை முடிந்து கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பும் பரீதுக்கு மலர்க்கொத்து கொடுத்து மருத்துவமனை ஊழியர்கள் வழியனுப்பி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |