கோவா கவர்னர் சத்யபால் மாலிக் மேகாலயா மாநிலத்துக்கு மாற்றப்பட்டு நிக்கிறார்.
காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு முன்பு, அதன் கடைசி கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் சென்ற ஆண்டு கோவா கவர்னராக மாற்றப்பட்டார். இந்நிலையில், மேகாலயா கவர்னர் ததகதா ராயின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால், சத்யபால் மாலிக் மேகாலயா மாநில கவர்னராக மாற்றப்பட்டு இருக்கிறார்.
இந்த தகவலை ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷியாரி, கோவா கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் எனவும் அறிவித்துள்ளது. சத்யபால் மாலிக், மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பதற்கு ததகதா ராய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.