Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

5மாதங்களுக்கு பிறகு…. சென்னையில் பண மழை…. வாரி வழங்கிய மதுபிரியர்கள் …!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து பொதுமுடக்கம் இருக்கும் நிலையில், மதுகடைகளை முழுவதும் அடைக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு இருந்தது.சென்னையில் கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

பல்வேறு கட்டுப்பாடுகளோடு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 720 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் ஆவலோடு வந்து மதுவை வாங்கி சென்றனர். விற்பனை தொடங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 33 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் தெரிவித்துள்ளது.

Categories

Tech |