பேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பேஸ்புக் தலைமை செயல் அதிகரிக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாரதிய ஜனதா கட்சியினர் வெறுப்பு பேச்சு தலை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். அதற்கு ஃபேஸ்புக் வலைத்தள நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரிண்டே நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்தியாவில் ஃபேஸ்புக்கின் செயல்பாடு ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், அமெரிக்க பத்திரிகையில் கூறப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டு பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கூறியுள்ளன.
இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டுகளை பேஸ்புக் நிறுவனம் ஏற்க மறுத்துள்ளது. மேலும் வன்முறையை தூண்டும் வெறுப்பு பேச்சுகளை பேஸ்புக்கில் தடை செய்து உள்ளதாகவும், எந்த கட்சியினர் அனுபவமோ அல்லது அரசியல் சார்ந்தோ தங்கள் நிறுவனம் செயல்படவில்லை என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், ஃபேஸ்புக் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ” இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடு, பாரபட்சமானதாகவும் நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தில் குறிப்பிடுவதாகும் அமைந்திருக்கிறது.
இந்த பிரச்சனையை காங்கிரஸ் மட்டுமன்றி வேறு சில கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கிளப்பி இருக்கின்றன. அதனால் ஃபேஸ்புக் தலைமையகம் இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை குழு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் உயர்மட்ட அளவில் கட்டாயம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை அறிக்கையை ஓரிரு மாதங்களுக்குள் பேஸ்புக் நிர்வாக குழுவிடம் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும். மேலும் இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தை வழிநடத்த புதிய தலைமையை நியமனம் செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.