Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா… ஒரே நாளில் 1,092 பேர் பலி…!!!

இந்தியாவில் ஒரே நாளில் 1,902 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், 52 ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மத்திய மற்றும் மாநில அரசுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தநிலையில் இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 64,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,67,274 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,092 ஆக இருப்பதால், மொத்த பலி எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட 6,76,514 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மட்டுமன்றி 20,37,871 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் தற்போது வரை கொரோணா பாதிப்பை கண்டறிவதற்கு 3,17,42,782 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 8,01,518 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

Categories

Tech |