அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,999 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,22,94,602 ஆக இருக்கின்றது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,83,429 ஆக உள்ளது. குணமடைந்து வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 1,50,37,670 ஆக இருக்கின்றது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 64,73,503 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில், ” கடந்த 24 மணி நேரத்தில் 43,999 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,55,974 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,358 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,75,074 கோடியை கடந்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 30,11,098 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.