Categories
உலக செய்திகள்

கொரோனா ஒழிக்க தடுப்பூசி தயார்… சீன அரசு தகவல்…!!!

சீனாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி விற்பனைக்கு தயாராகிவிடும் என்று அரசு மருந்து நிறுவனம் கூறியுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் தற்போது வரை 165 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் அனைத்து நாடுகளையும் முந்திக் கொண்டு, தாங்கள் உலகின் முதல் தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என்று ரஷ்ய அதிபர் புதின் கடந்த 11ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இருந்தாலும் ‘ஸ்புட்னிக் 5’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை கிடைக்கவில்லை என்றும், ரஷ்யா தடுப்பூசியில் அவசரம் காட்டி வருவதாகவும், உண்மை தகவல்களை வெளியிடுவதில்லை என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்த தடுப்பூசி குறித்து கூடுதலான தகவல்களை ரஷ்யாவிடம் கேட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு போட்டியாக சீனா தற்போது களத்தில் குதித்துள்ளது. அவ்வகையில் சீன அரசு மருந்து நிறுவனமான சினோபார்மும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கள் தடுப்பூசி விற்பனைக்கு தயாராக கிடைக்கும் என்று நேற்று அறிவித்து புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைவரான லியு ஜங்ஜென் கூறுகையில், ” எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வந்துவிடும். இந்த தடுப்பூசியின் விலை 140 டாலருக்கு குறைவாகவே இருக்கும். இதனை 2 டேஸ் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். முதல் டோஸ் போட்டு, 28 நாட்களுக்குப் பின்னர் அடுத்த டோஸ் போட வேண்டும். முக்கிய நகரங்களில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராம புறங்களில் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

எங்கள் நிறுவனம் இரண்டு தடுப்பூசிகளை தயாரித்து பரிசோதனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டிற்கு 22 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஆற்றலை பெற்றுள்ளது. நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சீன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் தற்போது பரிசோதனையில் உள்ள தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயத்தில் அறிவியல் வட்டாரங்களில் நெறிமுறை சார்ந்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்தியாவிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேக்கா மருந்து நிறுவனமும் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்டு, உள்நாட்டில் புனே பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவேக்சீன் ஆமதாபாத் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ் டி ஆகிய மூன்று தடுப்பூசிகளும் மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தடுப்பூசிகள் மக்களிடையே மிகுந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

Categories

Tech |