அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறதோ இல்லையோ அந்நாட்டின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு அனல் பதிவாகியிருக்கிறது. அங்குள்ள death valley -யில் தேசிய பூங்காவில் 130 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்பஅலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவரை பூமியில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சம் என தெரிவிக்கும் வானிலை ஆய்வாளர்கள், காடுகள் அழிக்கப்படுவதே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு முன்பு பூமியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 129.2 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இதுவும் 2013-ம் ஆண்டு death valley -யில் தான் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் தீவிரமாக பரவி வரும் காட்டுத் தீ அம்மாநிலத்தின் வெப்பத்தின் விழுக்காட்டை மேலும் அதிகரித்துள்ளது.