திண்டுக்கல்லில் ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக சித்தரித்து அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்கட்சியில் பெரும் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, அதிமுக தொண்டர்கள் திண்டுக்கல் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.
இந்த சுவரொட்டியில் ஓபிஎஸ் முதலமைச்சராகவும், எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சராகவும் சித்தரித்த அக்கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.