பிரபல நடிகை குஷ்பு தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான குஷ்பு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட கூடியவர். அவ்வப்போது பல அரசியல் சார்ந்த கருத்துக்களையும் இவர் பதிவிட்டு வருவார். இவருக்கு அரசியல் சார்ந்தும், சினிமா துறையில் இருந்தும் ஆதரவாளர்கள் சிலர் உள்ளனர்.
இந்நிலையில், குஷ்பு தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு பகிர்ந்துள்ளார். மேலும் கண்ணில் அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக சிறிதுகாலம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.