தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் மிதமான மழைக்கும் சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதா தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு வங்க கடல், மத்திய மேற்கு வங்க கடல், ஆந்திரா, ஒடிசா, கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ,அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.