Categories
தேசிய செய்திகள்

“ஆந்திராவில் ஷாக் சம்பவம்”…. கொரோனாவில் இருந்து மீண்ட குடும்பம்… திடீரென்று தற்கொலை…!!

கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் யாரும் பேசாத காரணத்தால் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவேதலா கிராமத்தை சேர்ந்த நரசய்யா என்பவர் ஆகஸ்ட் 16-ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் நரசய்யா குடும்ப உறுப்பினர்களிடம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர் யாரும் பேச கூட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நரசய்யா மனைவி சுனிதா (50), மகன் பணிகுமார் (25) அவரது மகள் லட்சுமி அபர்ணா (23) ஆகிய மூவரும் கொவ்வூர் ரயில்வே பாலத்தில் காரை நிறுத்திவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தத் தகவலை அறிந்து வந்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவர்கள் 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் மூன்று பேரின் உடலை தேடும்  பணியில் காவல்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |