Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவை கூட்டம்… புதிய வேலைவாய்ப்பு அமைப்பு தீர்மானம்… பிரதமர் மோடி…!!!

மத்திய அரசு பணிகளில் பிரிவு 3 மற்றும் 4ல் பணியாளர்களை தேர்ந்தெடுக்க புதிய அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தேசிய வேலைவாய்ப்பு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகளில் பிரிவு 3 மற்றும் 4ல் பணியாளர்களை தேர்ந்தெடுக்க புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகின்றது. மேலும் பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நியமனம் இந்த புதிய அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கருதப்படுகிறது.

Categories

Tech |