நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவதை நாங்களும் ஆமோதிப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.
அடுத்த தலைமுறை( Next Generation) அரசியல்வாதிகள் என்ற புத்தகத்திற்காக பிரியங்கா அளித்துள்ள பேட்டியில்,” நேரு குடும்பத்தை சாராதவர் காங்கிரஸ் தலைவராக வந்தாலும் அவரது கட்டளைக்கு தான் கீழ்படிவேன்” என தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி கூறுகையில், உத்தரபிரதேசத்தை தவிர்த்து அந்தமானின் பொதுச்செயலாளராக தன்னை நியமித்தாலும், மகிழ்ச்சியுடன் அங்கு சென்று பணியாற்றுவேன் எனவும் பிரியங்கா கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த போது மட்டுமல்லாமல் அதன் பிறகும் நேரு குடும்பத்திற்கு தலைவர் பதவி வேண்டாம் என்பதே ராகுலின் கருத்து எனக் கூறியுள்ள பிரியங்கா, தமது விருப்பமும் அதுவே என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.