நடிகர் சூரி எஸ்பிபி விரைவில் நலம் பெற்று வருவதற்கு மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூரி கூறியதாவது “எஸ்.பி.பி சார் எனக்கு விவரம் தெரிந்து ஒரு நாள் கூட உங்க குரலைக் கேட்காமல் இருந்ததில்லை.
விடியற்காலையில் நடந்தாலும் சரி, குடும்பத்தில் சந்தோஷமானாலும் சரி, தாலாட்டித் தூங்க வைக்கவும் சரி, தன்னம்பிக்கையோடு தட்டிக்கொடுத்து ஓட வைக்கிறது சரி, உங்க பாட்டுதான். எப்போதும்போல இதே சிரிச்ச முகத்தோடு நீங்க திரும்பி வந்து எங்களுக்காக பாடணும், உங்க குரலை கேட்டு கிட்டே என் மீதி வாழ்க்கைய ஓட்டணும்னு, ஆத்தா மதுரை மீனாட்சி அம்மனை மனதார வேண்டுகிறேன் சார்.” என்று சூரி தெரிவித்துள்ளார்.