சூர்யாவின் கண்கள் இயக்குனர் நிஷிகாந்துக்கு மிகவும் பிடிக்கும் என சங்கீதா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பாலிவுட் இயக்குனரான நிஷிகாந்த் காமத் காலமானார். இவர் பெங்காலியில் வெளியாகி தேசிய விருது பெற்ற “டோம்பிவிலி பாஸ்ட்” என்ற படத்தை தமிழில் “எவனோ ஒருவன்” என்கின்ற பெயரில் மாதவனை வைத்து 2007ஆம் ஆண்டு ரீமேக் செய்தார். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் “பிதாமகன்” சங்கீதா. நஷி காந்தின் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்த சங்கீதா, அவர் தமிழில் சூர்யா விஜய் ஆகியோரை வைத்து படம் இயக்க விரும்பிய தகவலை வெளியிட்டுள்ளார். குறித்து அவர் கூறுகையில் “எவனோ ஒருவன் பட புரமோஷனுக்காக நியூயார்க் சென்றிருந்தபோது அங்கு நிஷிகாந்த், மாதவன் மற்றும் நான் மூவரும் இரவு நேரங்களில் வாக்கிங் சென்ற நினைவுகள் மறக்க முடியாதவை.
சமூகத்தின் மீது அவருக்கு இருந்த கோபம்தான் “எவனோ ஒருவன்” படம். மராத்தியில் இயக்கிய “லை பாரி” என்ற படத்தில் சூர்யாவை வைத்தோ அல்லது விஜய்யை வைத்தோ தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார். அந்தப் படம் வெளியானபோது என்னை அழைத்து அந்த படத்தை பார்க்குமாறும், பார்த்ததும் நீயே சூர்யாவிடம் கால்ஷீட் வாங்கி கொடுப்பாய் என்றும் கூறினார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அதற்குப் பின் அந்த முயற்சியை அவர் தொடரவில்லை. சூர்யாவின் கண்கள் அவருக்கு மிகவும் பிடிக்கும். சூர்யாவின் “காக்க காக்க” படத்தை இந்தியில் அவர்தான் ரீமேக் செய்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.”