வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர்மழையால் ஈரோட்டில் உற்பத்தியான பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன.
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த விசைத்தறிகள் மீண்டும் இயங்கி வருகின்றன. இதனால் ஜவுளி ஏற்றுமதி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட மாநிலங்களில் 20 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களுக்கு துணிகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர்.
20 நாட்களில் மட்டும் 40 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்து உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வட மாநிலங்களில் பெய்யும் மழை கூடுதல் சுமையை தந்துள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.