சேலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு நாளை திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் நேற்று அவரது வீட்டில் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விருந்து நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் பெண் திடீரென மாயமாகினார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.