Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…காரிய தடைகள் ஏற்படும்…எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!  இன்று மனம் அமைதி பெறுவதற்கு கண்டிப்பாக தியானம் செய்யுங்கள். கவுரவக் குறைவை ஏற்படுத்தும் செயல்களை கண்டிப்பாக தவிர்க்கவும். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போதும் கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். உங்களுடைய ரகசியங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதால் காரிய தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வீண் வாக்குவாதங்கள் அதன் மூலம் பிறரிடத்தில் பகை போன்றவையும் இருக்கும். கொஞ்சம் பொறுமையாக இன்று செயல்படுங்கள். தந்தை மூலம் வரவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியத்தில் எந்த வித குறையும் இல்லை. நீங்க தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வருமானத்திற்காக சில முக்கிய திட்டங்களை இன்று நீங்கள் திட்டுவீர்கள்.

காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும்,சித்தர்கள்  வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |