மீன ராசி அன்பர்களே…! இன்று எதிலும் முறைதவறி மட்டும் நடக்க வேண்டாம். பேச்சில் கண்டிப்பாக நிதானம் எப்போது வேண்டும். தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை சரியாக உணர்ந்து கொண்டவர்கள் நீங்கள். உயர்வு வரும் பொழுது பணிவு இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டவர்கள் நீங்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும்.பயணங்களால் செலவு கொஞ்சம் இருக்கும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றியும் காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பெண்களால் கொஞ்சம் யோகமான சூழலும் வந்து சேரும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். ஆனால் பொறுமையாக இருங்கள் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற்றுவிடலாம்.
மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்விர்கள்.காதலர்களுக்கு ஓரளவு இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.