Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுச் சங்கத்தில் “முறைகேடு”… கருப்பு முகமூடி அணிந்து போராட்டம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட குப்பாண்டம்பாளையம் பகுதியில் இருக்கும் கூட்டுறவு சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும் இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், இதுவரை இவ்விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை சுட்டிக்காட்டி உள்ளனர்.

தமிழ்நாடு அரசு இதன் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை சம்பந்தப்பட்ட குப்பாண்டம்பாளையம் கூட்டுறவு சங்க வளாகத்திலேயே முகமூடி அணிந்து கொள்ளை அடித்துச் செல்வது போல, நிகழ்த்திக்காட்டினர்.

Categories

Tech |