Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலோர மாவட்டங்களான மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டியிருக்கும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும், வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகள், கோவா, மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால்  மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |