தேர்வு கட்டணம் செலுத்த தவறினால் பல்கலைக்கழகத்திலிருந்து பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பிற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அண்மையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது . அதில் செமஸ்டர் கட்டணத்தை செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்த தவறும் மாணவர்களது பெயர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படும் என அறிவித்து உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக கட்டணம் செலுத்த சொல்லும் நடவடிக்கையை பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.