போலீசார் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்து வெடி குண்டு வீசி பயிற்சி எடுத்தது போன்ற வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
ஏராளமான கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி துரைமுத்து, வெடிகுண்டு தயாரித்து மீண்டும் ஒரு கொலை செய்வதற்கு தயாராகி வருகிறான் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அவனை பிடிக்கச் சென்ற போலீசார் மீது துரைமுத்து வெடிகுண்டை வீசியதால் அந்த வெடிகுண்டு வெடித்து, காவலர் சுப்ரமணியன் உயிரிழந்த நிலையில், பிரபல ரவுடி துரைமுத்துவும் பலியானான்.
இதற்கிடையே பலியான ரவுடி துரைமுத்து மக்கள் நடமாட்டம் ஏதுமில்லாத இடத்தில் வெடிகுண்டு வீசி பயிற்சி மேற்கொள்வது போன்ற வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டிருக்கும் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரவுடியின் உடல் அடக்கம் செய்யும் பொழுது வீச்சரிவாளை அவன் மீது வைத்து சொந்த ஊரான ஏரல் அருகே இருக்கும் மேல மங்கலம்குறிச்சியில் உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.