நடிகர் கமல் பிக்பாஸ் “சீசன்-4” நிகழ்ச்சியில் புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 3 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அடுத்ததாக பிக்பாஸ் நான்காவது சீசனிலும் தொகுத்து வழங்க தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு நடந்த சீசனில் காதல் தோல்வி, தற்கொலை முயற்சி, கவர்ச்சி உடை அணிதல், மோதல் போன்ற சர்ச்சைகளால் சில அமைப்புகள் இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை செய்யுமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் நான்காவது சீசனுக்கு நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தை எதிர்த்து பரபரப்பாக பேசப்பட்ட சூர்யா தேவி, நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. இதனால் இந்த சீசனும் .பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது