Categories
மாநில செய்திகள்

” விநாயகர் சதுர்த்தி சிலைக்கான தடையை நீக்க வேண்டும்”… பாஜக மாநிலத் தலைவர் கோரிக்கை…!!

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்க வேண்டுமென எல். முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடகம் போன்ற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் மக்கள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கொடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசியபொது, விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு என அவர் கூறினார்.

Categories

Tech |