திமுகவின் முன்னாள் அமைச்சர் இறப்பிற்கு அண்ணா அறிவாலயத்தில் அரைக்கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தி.மு.க முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்த ரகுமான்கான் கொரோனா சிகிச்சையிலிருந்து மீண்டு 3 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பிய நிலையில் இன்று மாரடைப்பால் காலமாகி உள்ளார். அவர் மறைவை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் ரகுமான்கான் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மற்றும் மற்ற தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் ரகுமான்கான் அவருடைய இறப்பை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்சி நிகழ்வுகள் 3 நாள் ரத்து செய்யப்படும் என்றும், கட்சிக் கொடிகள் 3 நாள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்பின் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இறந்த ரகுமான்கன் திமுகவின் அதிரடி பேச்சாளர் ஆவார். மேலும் இவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.