Categories
உலக செய்திகள்

4 லட்சம் பேருக்கு தினம்தோறும் கொரோனா பரிசோதனை… இங்கிலாந்து அரசு அதிரடி திட்டம்…!!!

இங்கிலாந்து அரசு நாள்தோறும் நான்கு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தில் நாள்தோறும் 28,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது தினம் தோறும் நான்கு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் புதிய பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அரசு, உமிழ்நீர் மூலமாக கொரோனா பாதிப்பு உடனடியாக உறுதி செய்யும் பரிசோதனைக் கருவியை வடிவமைப்பதில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகமாக இருப்பதால், பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது.

Categories

Tech |